/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
/
தேனி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
தேனி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
தேனி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
ADDED : மார் 02, 2025 05:28 AM

ஆண்டிபட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி அருகே மதுராபுரியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க., வினர் ஏற்பாடு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.
ஆண்டிபட்டியில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அ.தி.மு.க., தேனி மாவட்டச் செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் பிட் நோட்டீஸ் விநியோகித்து ஆதரவு திரட்டினார். ஆண்டிபட்டி -தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் ஊர்வலத்தை முடித்தனர்.