ADDED : ஜூலை 24, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் தேன் வளர்ப்பினை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டி, தேனீக்கள், தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இவற்றின் செலவுத்தொகையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக தலா 20 தேன் பெட்டி, தேனீக்கள், இரு தேன் பிரித்தெடுக்கும் கருவி வழங்கப்படும்.
விரும்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேலும் விபரங்கள் அறிந்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.