/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாகன சோதனையில் 'டார்கெட்' முடிக்க திணறும் பறக்கும் படை
/
வாகன சோதனையில் 'டார்கெட்' முடிக்க திணறும் பறக்கும் படை
வாகன சோதனையில் 'டார்கெட்' முடிக்க திணறும் பறக்கும் படை
வாகன சோதனையில் 'டார்கெட்' முடிக்க திணறும் பறக்கும் படை
ADDED : ஏப் 08, 2024 04:35 AM
ஆண்டிபட்டி : வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படை, நிலை குழுக்களுக்கு டார்கெட் நிர்ணயிப்பதால் அதனை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
தேனி லோக்சபா தேர்தலில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 24 மணி நேரமும் வாகன சோதனை செய்து, விதி மீறல்களை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்களில் தற்போது கூடுதலாக இரு துணை ராணுவ வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு வாகனத்திலும் 9 பேர் கொண்ட குழு பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதனால் குழுவில் உள்ள 4 நபர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பஸ் அல்லது தனியார் வாகனத்தில் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
நிலை கண்காணிப்பு குழு போலீசார் கூறியதாவது: ஒரு மணி நேரத்தில் 50 வாகனங்களை சோதனையிட 'டார்கெட்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 50 வாகனங்கள் சோதனை சாத்தியமாகிறது. கிராமசாலைகளில் உள்ளூர் வாகனங்களே அதிகம் சென்று வருகிறது. இதனால் 50 வாகனங்களை ஒரு மணி நேரத்தில் சோதனை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
உள்ளூர்வாசிகள் வரும் வாகனங்களை திரும்ப திரும்ப சோதனை செய்வதால் குழப்பம் ஏற்படுகிறது. நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படை, வீடியோ கண்காணிப்புக்குழுக்களுக்குள்ள பிரச்னைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்க வேண்டும், இவ்வாறு தெரிவித்தனர்.

