/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அட்சய திரிதியை சிறப்பு பூஜை முன்பதிவு செய்து பயனடையலாம்
/
அட்சய திரிதியை சிறப்பு பூஜை முன்பதிவு செய்து பயனடையலாம்
அட்சய திரிதியை சிறப்பு பூஜை முன்பதிவு செய்து பயனடையலாம்
அட்சய திரிதியை சிறப்பு பூஜை முன்பதிவு செய்து பயனடையலாம்
ADDED : மே 09, 2024 06:06 AM
தேனி: 'பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் அட்சய திரிதியை சிறப்பு பூஜை நாளை மே 10ல் காலை 10:30 மணிக்கும், இரண்டாம் பூஜை மாலை 5:00 மணிக்கும் நடக்க உள்ளதால், பக்தர்கள் முன்பதிவு செய்து பூஜையில் பங்கேற்று பயனடையலாம்.' என, நிர்வாகி கிருஷ்ண சைதன்ய தாஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அட்சய திரிதியை பூஜையின் மகத்துவம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாள்தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்யலட்சுமி அவதரித்த புண்ணிய தினமாகும். குபேரர் ஐஸ்வர்ய நிதி கலசத்தை மஹாலட்சுமியிடம் இருந்து பெற்ற நாளாகும். ரோகிணி நட்சத்திரத்துடன் அட்சய திரிதியை கூடி வருவதால் கிருஷ்ணர் சன்னதியில் துளசி, விளக்கு, கலசநீர், குங்குமம் கொண்டு செய்யப்படும் லட்சுமி பூஜை விஷேச பலனளிக்கும். பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் மே 10ல் காலை 10:30 மணிக்கும், இரண்டாம் கால பூஜை மாலை 5:00 மணிக்கும் துவங்கி நடக்க உள்ளது. மாலை 6:00 மணிக்கு ராதா கிருஷ்ணர் அபிஷேகம் நடக்கும். இதில் பங்கேற்பவர்கள் 96005 36261 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
மேலும் பூஜையில் பங்கேற்பவர்களுக்கு விவசாயம் பெருகும், திருமணம் கைகூடும், வளங்கள் பெருகும், கஷ்டங்கள் விலகும், சிறார் கல்வி நலன் சிறக்கும், வியாபாரம் விருத்தி அடையும், தம்பதியர் ஒற்றுமை பெருகும், குழந்தை பாக்கியம் ஏற்படும், மன நிம்மதி உட்பட சகல பலன்களையும் பெறலாம்., என்றார்.