ADDED : மார் 31, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி லோக்சபா தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்பட 25 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமை வகித்தார். அ.ம.மு.க., தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., பகுஜன் சமாஜ் கட்சி தவிர மற்ற 20 சுயேச்சை வேட்பாளர்களுக்கு பானை, டார்ச் லைட், கரும்பு விவசாயி, பலாபழம், வாளி உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதிகாரிகள் கூறுகையில், 'வேட்பு மனுத்தாக்கலின் போது 10 சுயேச்சைகள் மட்டும் சின்னங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
மற்ற 10பேர் விண்ணப்பங்களில் சின்னங்களே கோரவில்லை. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சின்னங்களில் இருந்து தேர்வு செய்ய கூறி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது,' என்றனர்.

