ADDED : ஜூலை 06, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 1924ம் ஆண்டு துவக்கப்பட்டு இந்த ஆண்டு நுாற்றாண்டு காணுகிறது.
இந்த பள்ளியில் கடந்த 1974--1975ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
இப்பள்ளியில் பணியாற்றிய தமிழாசிரியர் ராஜா முக்கிய விருந்தினராக பங்கேற்றார். தங்களின் ஆசிரியரை மாணவர்கள் சால்வை அணிவித்து கவுரவப் படுத்தினார்கள். பின்னர் தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அடுத்த கூட்டத்தில் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை அழைத்து கவுரவப்படுத்துவது என்றும், பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவது என்றும் முடிவு செய்தனர்.