/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விருதுநகரில் இருந்து கூடுதலாக 170 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தன
/
விருதுநகரில் இருந்து கூடுதலாக 170 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தன
விருதுநகரில் இருந்து கூடுதலாக 170 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தன
விருதுநகரில் இருந்து கூடுதலாக 170 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தன
ADDED : ஏப் 03, 2024 07:19 AM

தேனி : லோக்சபா தேர்தலில் பயன்படுத்துவதற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 1225 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேர்தலுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாலுகா அலுவலகங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி தலா 1469, வி.வி.பேட் 1591 அனுப்பப்பட்டன.
ஆனால் தேனி தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஓட்டுப்பதிவு இயந்திரம் 1322 மட்டுமே இருந்தன. கூடுதலா 147 இயந்திரங்கள் தேவைப்பட்டன. இதனை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 170 இயந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டன. அவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் முன்னிலையில்ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் ஷீலா (தேர்தல்), பிரகாஷ்(வளர்ச்சி), தேர்தல் தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏப்.,5ல் முதற்கட்ட சோதனை செய்ய உள்ளதாகவும், அதன் பின்னர் தாலுகா வாரியாக அனுப்ப பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

