/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி- - வேலப்பர் கோயில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
/
ஆண்டிபட்டி- - வேலப்பர் கோயில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ஆண்டிபட்டி- - வேலப்பர் கோயில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ஆண்டிபட்டி- - வேலப்பர் கோயில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2024 07:55 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் இருந்து மாவூற்று வேலப்பர் கோயில் வரை தினமும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனி சிறப்பு.
ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆண்டிபட்டியில் இருந்து தெப்பம்பட்டி வரை மட்டுமே பஸ் வசதி உள்ளது. தினமும் காலை 8:30, மாலை 3:30 மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து கோயில் வரை இரு முறை மட்டுமே அரசு பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில் பக்தர்கள் தெப்பம்பட்டியில் இருந்து கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் சென்று திரும்புகின்றனர். தெப்பம்பட்டியில் இருந்து 8 கி.மீ., தூரம் அனைவரும் நடந்து சென்று திரும்புவதும் சாத்தியம் இல்லை. எனவே ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயிலுக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க தேனி மாவட்ட அரசு போக்குவரத்துத்துறை நிர்வாக அதிகாரிகளநடவடிக்கை எடுக்க வேண்டும்.