/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 17, 2024 05:08 AM

போடி, : போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50 வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஏல விவசாயிகள் சங்க நிர்வாகி ஞானவேல் தலைமை வகித்தார்.
கல்லூரி துணைத் தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், நிர்வாகஸ்தர்கள் கமலநாதன், சொரூபன், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், நந்தகுமாரன், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
போடி டி.எஸ்.பி., பெரியசாமி, நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். மாணவர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம், தேவராட்டம், தப்பாட்டம், பிளாஷ்மொப் ஆட்டம் நடந்தது.
ஊர்வலம் போடி சார்பதிவாளர் அலுவலகம் முன் துவங்கி காமராஜ் பஜார், கட்டபொம்மன் சிலை, போஜன் பார்க், சர்ச் தெரு, பி.ஹைச்., ரோடு வழியாக போடி பஸ்ஸ்டாண்ட் வந்து அடைந்தனர்.
ஊர்வலத்தில் ஏல விவசாயிகள் சங்க நிர்வாகஸ்தர்கள் இமாம்தீன், மாணிக்கவாசகம், நித்தியானந்தன், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., நுண்கலை மன்ற மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.