/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி கவுன்சில் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/
ஆண்டிபட்டி கவுன்சில் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஆண்டிபட்டி கவுன்சில் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஆண்டிபட்டி கவுன்சில் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ADDED : ஆக 31, 2024 06:37 AM
ஆண்டிபட்டி :
ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சந்திரகலா தலைமையில் நேற்று மாலை தொடங்கியது. துணைத் தலைவர் ஜோதி, சுகாதார ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டுகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் அடுத்தடுத்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கும் படியும் கூட்டத்தில் வலியுறுத்தினர். கூட்டத்திற்கு செயல் அலுவலர், தலைமை எழுத்தர் வராததால் உறுப்பினர்களின் கேள்விக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அலுவலக பணியால் பேரூராட்சி அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் கூட்டத்தை ஒத்தி வைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு தகவல் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.