/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
/
ஆண்டிபட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ஆண்டிபட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ஆண்டிபட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : மே 30, 2024 03:58 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்று (30.5.2024) காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
இன்று துவங்கும் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
முதல் கட்ட பொதுக்கலந்தாய்வு ஜூன் 10ல் பி.எஸ்.சி.,கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுக்கும், ஜூன் 12ல் பி.ஏ.,வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவுக்கும், ஜூன் 14ல் பி.ஏ., பொருளாதார பாடப்பிரிவுக்கும் நடைபெறும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.