/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருக்கெழுத்து தேர்வில் ஆண்டிபட்டி மாணவி முதலிடம்
/
சுருக்கெழுத்து தேர்வில் ஆண்டிபட்டி மாணவி முதலிடம்
ADDED : ஏப் 24, 2024 08:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பி.எஸ்சி., பட்டதாரி மாணவி தாரணி, 21, சுருக்கெழுத்து தமிழ் இளநிலைதேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த பிப்., 17,18ல் சுருக்கெழுத்து அரசு தொழில்நுட்ப தேர்வுகள் நடந்தன. இதன் முடிவுகள் நேற்று மதியம் 3:00 மணிக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் இணையதளத்தில் வெளியானது.
ஆண்டிபட்டி அன்பு ஸ்கூல் ஆப் காமர்ஸ் பயிலக மாணவி தாரணி, சுருக்கெழுத்து தமிழ் இளநிலை பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இம்மாணவியை பயிலக நிர்வாகி வெங்கடகிருஷ்ணன், முதல்வர் உமா மகேஷ்வரி பாராட்டினர்.

