ADDED : மே 05, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி முனியாண்டி சுவாமி கோயில் சித்திரை திருவிழா நடந்தது.
மேலத்தெரு முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
பொங்கலிட்டு, மா விளக்கு ஏற்றி அலகு குத்தி பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்.
அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்