/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர் சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
/
பயிர் சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 23, 2024 03:44 AM
தேனி: மாவட்டத்தில் 20 எக்டேர் கொடி வகை பயிர்கள் சாகுபடி செய்ய எக்டேருக்கு தலா ரூ.3 லட்சம் மானியம் என 20 எக்டேருக்கு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கொடிவகை பயிர்களாக திராட்சை, பாகல், புடலை, கோவைக்காய் உள்ளிட்டவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கொடிவகை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க 20 எக்டேருக்கு தலா ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டடத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகைப்படம், ஆதார் நகல், ரேஷன்கார்டுநகல், பட்டா, அடங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு எக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பயனடைந்தவர் விண்ணப்பிக்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

