ADDED : பிப் 10, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டராக சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2015 தமிழக கேடர்ட் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் நீலகிரி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணியை துவக்கினார். தொடர்ந்து கடலுார், நாகப்பட்டினம் மாவட்ட உதவி கலெக்டராக பணிபுரிந்தார்.
தற்போதைய தேனி கலெக்டர் ஷஜீவனா சிறப்பு செயலாக்கத்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் 19வது கலெக்டராக ரஞ்சித்சிங்கை நியமனம் செய்து, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

