/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., அ.தி.மு.க., வில் உள்ளடி வேலை நிர்வாகிகளை கண்காணிக்க ரகசிய குழுக்கள் சட்டசபை தொகுதி வாரியாக நியமனம்

ADDED : மார் 25, 2024 05:28 AM
கம்பம் : தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் உள்ளடி வேலைகள் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், இரு கட்சி தலைமையும் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு ரகசியமாக கண்காணிக்க ஆட்களை நியமித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னமும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் புதன் கிழமை சூடு பிடிக்கும் என தெரிகிறது.
இத் தேர்தலில் பா.ஜ. கூட்டணியில் அ.ம.மு.க-., ஓ.பி.எஸ். அணி, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சில குறிப்பிட்ட - வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ளடி வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது .
தி.மு.க.,வில் தேனி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்ட செயலாளர்களுக்கும், சில கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே சுமூக உறவு இல்லை.
இருந்த போதும் தங்கதமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தி.மு.க.வினர் கோஷ்டி பூசலை மறந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
அ.ம.மு.க. வேட்பாளர் தினகரன் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது தேனி வந்து அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத தலைவராக செயல்பட்டார். தேனி எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகளும் இவருக்கு நன்கு பரிட்சையமானவர்கள் .
எனவே அவர்களில் பலருடன் இன்று வரை தினகரன் தொடர்பில் உள்ளார். இவர் வேட்பாளராக போட்டியிட முடிவு செய்தவுடன் பல அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அலைபேசியில் பேசியதாக கூறுகின்றனர்.
எனவே அ.தி.மு.க. விலும், தி.மு.க. விலும் உள்ளடி வேலைகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இரு கட்சி தலைமையும் ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒருவர் வீதம் ரகசியமாக நிர்வாகிகளை கண்காணிக்க ஆட்களை நியமித்துள்ளனர்.
கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை கண்டறிந்து கட்டம் கட்டவும் கட்சிகளின் தலைமை தயாராகி வருகிறது.