/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 18, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : கம்பம் புதுப்பட்டியில் உள்ள கே.எல்.எல்.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் சுந்தரி தலைமை வகித்தார். ஜெ.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர் எல்.ரவி -- ஜமுனா தம்பதியினர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தலைமை ஆசிரியை மகேஸ்வரி, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.