ADDED : மார் 02, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாணவர்களின் கற்றல் திறன்களை அதிகரிப்பதற்காக இணைய வழி கல்வி வானொலியில் 20 ஆயிரம் குரல்பதிவுகளை பதிவேற்றம் செய்து, சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
உத்தமபாளையம் ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவனத்தில் தேசிய அறிவியல் தினவிழாநடந்தது.ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனமுதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கரியன், தெய்வேந்திரன் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், இணைய வழி கல்வி வானொலியின் ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டி ஆசிரியையைகள் ஜெயலட்சுமி, புனிதவதி, சாந்தி, நித்யா, வீரலட்சுமி, ஜெயந்தி ஆகியோருககு, முதல்வர் உதவி திட்ட அலுவலர்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிகவுரவித்தனர்.