/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க.,வை விரட்ட தயாராகிட்டீங்களா: அ.தி.மு.க. வேட்பாளர் பிரசார பாணியில் மாற்றம்
/
தி.மு.க.,வை விரட்ட தயாராகிட்டீங்களா: அ.தி.மு.க. வேட்பாளர் பிரசார பாணியில் மாற்றம்
தி.மு.க.,வை விரட்ட தயாராகிட்டீங்களா: அ.தி.மு.க. வேட்பாளர் பிரசார பாணியில் மாற்றம்
தி.மு.க.,வை விரட்ட தயாராகிட்டீங்களா: அ.தி.மு.க. வேட்பாளர் பிரசார பாணியில் மாற்றம்
ADDED : ஏப் 13, 2024 02:26 AM
கம்பம் : தி.மு.க. வை விரட்ட தயாராகிட்டீங்களா என பொதுமக்களை பார்த்து அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி கேள்வி கேட்டு பிரசாரம் செய்தார்.
தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி பிரசாரத்தை துவங்கிய நாளில் இருந்து அதிகம் பேசுவதில்லை. அ.தி.மு.க ஆட்சி மலர தனக்கு ஒட்டு போடுங்கள் என்பதையே பிரசாரங்களில் வலியுறுத்தினார். உடன் வரும் பேச்சாளர்கள் தான் மற்ற விஷயங்களை பேசி ஓட்டு கேட்டனர்.
நேற்று மாலை கம்பத்தில் 16 இடங்களில் ஜீப்பில் நின்றபடி வேட்பாளர் ஆதரவு திரட்டினார். நாட்டுக்கல் பகுதியில் அவர் பேசுகையில், ஆயிரம் ரூபாய் வந்ததா, பெரும்பாலோருக்கு வரவில்லை. சமையல் காஸ் மானியம் ரூ.100 தருவேன் என்றாரே, வழங்கினாரா. இது எல்லாம் தி.மு.க. வின் ஏமாற்று வேலை. இப்போது. அ.தி.மு.க. வாக்குறுதி கொடுத்துள்ளது. ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசம்.
ஒரு குடும்பத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு சிலிண்டர் போதும். அப்படியென்றால் ஒராண்டிற்கு முழுவதும் சிலிண்டர் இலவசம்.
ஆயிரம் ரூபாய் என்ன ? நாங்கள் மாதந்தோறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்துவோம்.
சொன்னதை செய்யாதவர் ஸ்டாலின். அ.தி.மு.க. சொன்னதை செய்யும். சொல்லாததையும் செய்யும். நமது குழந்தைகளை போதைக்கு அடிமையாக்கி விட்டனர். பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. எனவே தி.மு.க. அரசை விரட்டி அடிக்க தயாராகி விட்டீர்களா. நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்பதை உங்கள் முகங்களில் தெரிகிறது, இவ்வாறு பேசினார்.
நேற்று தேனி ஒன்றியம், கோவிந்தநகரத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஓட்டு சேகரித்தார். மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன், மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி., பார்த்தீபன், முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் பங்கேற்றனர்.

