ADDED : செப் 01, 2024 05:56 AM
தேனி : உப்புத்துறை கோவில்புரம் கார் டிரைவர் ஆனந்த் 26. இவரும், இவரது உறவினர் மலைச்சாமி இணைந்து பழனிசெட்டிபட்டியில் இருந்த பூதிப்புரம் செல்லும் ரோட்டில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றனர்.
மது குடித்தவர்கள் உள்ளே அனுமதி இல்லை என தியேட்டர் ஊழியர்கள் கூறி தடுத்தனர். இதனால் நான் மதுக்குடிக்கவில்லை என ஆனந்த் தெரிவித்தார். அதற்குள் தியேட்ட ஊழியர்களை திட்டி, தாக்கினர்.
காயமடைந்த டிரைவர் க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மஞ்சிநாயக்கன்பட்டி முருகேஸ்வரன் 47, அதே தியேட்டரில் வாட்ச் மேனாக பணிபுரிகிறார். இவர் மீது உரசும் வகையில் காரை ஆனந்த் ஓட்டிவந்தார்.
தட்டிகேட்ட முருகேஸ்வரனை ஆனந்த் தாக்கினார். காயமடைந்த முருகேஸ்வரன் அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இவரது புகாரில் ஆனந்த் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.