/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேட்பாளர்கள், முகவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு
/
வேட்பாளர்கள், முகவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு
ADDED : மே 23, 2024 03:41 AM
தேனி: ஓட்டு எண்ணிக்கையில் வேட்பாளர்கள், முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது.
தேனி தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 25 பேர் போட்டியிட்டனர்.
கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்லுாரிகளில் ஓட்டு எண்ணிக்கை 14 சுற்றுகளாக நடக்கிறது.
இதில் பங்கேற்க உள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்மேற்பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. அடுத்த வாரம் இரண்டாம் கட்ட பயிற்சி வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது.அதே சமயம் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களுக்கும் பயிற்சி வழங்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கையின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது உள்ளிட்டவை பற்றி பயிற்சியில் அறிவுறுத்தப்பட உள்ளன.

