/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு 13,365 பேர் எழுத ஏற்பாடு
/
நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு 13,365 பேர் எழுத ஏற்பாடு
நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு 13,365 பேர் எழுத ஏற்பாடு
நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு 13,365 பேர் எழுத ஏற்பாடு
ADDED : மார் 02, 2025 05:16 AM
தேனி: நாளை துவங்கும் பிளஸ் 2 அரசுப்பொதுத்தேர்வினை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 13,365 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு நாளை(மார்ச் 3) அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. தேனி மாவட்டத்தில் 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6271 பேர், மாணவிகள் 6791 பேர் என மொத்தம் 13,062 பேரும், தனித்தேர்வர்கள் 303 பேர் என மொத்தம் 13,365 பேர் தேர்வினை எழுத உள்ளனர். தேர்வு காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 வரை நடக்கிறது. மாணவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9:00 மணிக்கு முன்னதாகவே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 54 மையங்களில் தேர்வுகள் நடக்கிறது. ஒவ்வொரு மையத்திலும் தலைமை ஆசிரியர் நிலையிலான ஒரு முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற்கொள்ள 7 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர சோதனை மேற்கொள்ளும் பணியில் 140 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்விற்கான ஏற்பாடுகளை சி.இ.ஓ., இந்திராணி தலைமையில் கல்வித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 5ல் துவங்குகிறது. இத்தேர்வினை பள்ளி மாணவர்கள் 6289 பேர், மாணவிகள் 6842 பேர் என மொத்தம் 13,131 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 235 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வுகள் 54 மையங்களில் நடக்கிறது.