/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் எனக் கூறி ரூ.24.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் எனக் கூறி ரூ.24.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் எனக் கூறி ரூ.24.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் எனக் கூறி ரூ.24.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : செப் 04, 2024 01:45 AM

தேனி : முதலீடு செய்யும் பணத்திற்கு 150 நாட்களில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.24.50 லட்சம் மோசடி செய்த மதுரை மாவட்டம் எர்ரம்பட்டியை சேர்ந்த செல்வராஜை 56, போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் எல்.எப்., ரோடு பாலஸ்ரீனிவாசன் 51. இவரது அலைபேசிக்கு டெலிகிராம் செயலி மூலம் குறுஞ்செய்தி வந்தது.
அதில் திண்டுக்கல், சென்னையில் கிளைகளை கொண்ட பிரைட் வே என்ற தனியார் நிதி நிறுவனம் பெயரை குறிப்பிட்டு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் வரை முதலீடு செய்தால், அப்பணம் 150 நாட்களில் இந்திய மதிப்பிலும், கிரிப்டோ கரன்சி மதிப்பிலும் 2 மடங்காக திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை நம்பிய பாலஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, மதுரையில் நிறுவனம் நடத்திய கூட்டங்களில் பங்கேற்றார். இந்நிறுவனத்தில் ஆன்லைன் இணையத் தளத்தில் பயனாளிகள் கணக்கு துவங்க வேண்டும் என்றனர். அதனால் தனக்கும், தனது நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 52 பேருக்கு கணக்குகளை துவக்கி, கடந்தாண்டு செப்., 8 முதல் அக்., 15 வரை ரூ.24.50 லட்சம் செலுத்தி முதலீடு செய்தார். ஆனால் அதற்கு லாபம் கிடைக்க வில்லை. அதன் பின் நிறுவனத்தில் பேசியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
நிறுவன ஊழியர்கள் தனியரசன், லதா, பிரகாஷ், டேனியல் சந்தோஷ், பாலமுருகன், பாலாஜி, செல்வராஜ் ஆகிய 7 பேர் மீது எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். நிறுவனத்தின் இயக்குனர் மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே எர்ரம்பட்டியை சேர்ந்த செல்வராஜை 56, நேற்று சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கைது செய்தார்.
செல்வராஜ் மீது திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் ரூ.11 கோடி மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்பெக்டர் கூறுகையில், கைதான செல்வராஜின் உறவினர் பிரகாஷ் மூலம் தேனியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மோசடிகள் நடந்துள்ளது என்றார்.