/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஸ்கேன் மெஷின் வாங்கித் தருவதாக கூறி ரூ.25.48 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
ஸ்கேன் மெஷின் வாங்கித் தருவதாக கூறி ரூ.25.48 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஸ்கேன் மெஷின் வாங்கித் தருவதாக கூறி ரூ.25.48 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஸ்கேன் மெஷின் வாங்கித் தருவதாக கூறி ரூ.25.48 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : செப் 12, 2024 12:26 AM

தேனி:தேனி பேராசிரியர் வேல்முருகன் என்பவரிடம் ஸ்கேன் மெஷின் வாங்கித் தருவதாக கூறி ரூ.25.48 லட்சம் மோசடி செய்த மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளர் வேணுகோபாலை 47, போலீசார் கைது செய்தனர்.
தேனி என்.ஆர்.டி., நகர் ஜவஹர் மெயின் ரோடு வேல்முருகன் 52. இவர் கேரளா, கட்டப்பணையில் உள்ள நர்சிங் கல்லுாரியில் பேராசிரியராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
சமீபத்தில் தேனியில் ஸ்கேன் சென்டர் துவக்கினார். பின் சி.டி., ஸ்கேன் மெஷின் வாங்க பெங்களூரு ராம்நகரில் மருத்துவமனை நடத்தும் நண்பர் டாக்டர் வெங்கட் என்பவரிடம் ஆலோசனை கேட்டார். அவர், தனது மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் சேலம் மாவட்டம் மெய்யனுார் அழகாபுரம் வேணுகோபாலை அறிமுகம் செய்தார்.
பின் வேணுகோபால், அவரது மனைவி ஸ்ரீஷா, தேனி ஸ்கேன் சென்டருக்கு வந்து '36 மாத வாரண்டியுடன் சி.டி., ஸ்கேன் விலைக்கு உள்ளது. அதன் விலை ரூ.75 லட்சம் என்றனர்.
வேல்முருகன் முதல் தவணையில் ரூ.35 லட்சம் வழங்குவதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மீதி ரூ.40 லட்சம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்தனர். பின் பல்வேறு தவணைகளில் ரூ.33 லட்சத்து 48 ஆயிரத்து 100 வேணுகோபால் வங்கிக் கணக்கிற்கு வேல்முருகன் அனுப்பினார். அதன் பின்பும் ஸ்கேன் மெஷின் அனுப்பாமல் கால தாமதம் செய்தார்.
வேல்முருகன் பணத்தை திருப்பித்தர கோரினார். வேணுகோபால் ரூ.8 லட்சம் திருப்பி அனுப்பிவிட்டு, மீதமுள்ள ரூ.25.48 லட்சத்தை தராமல் மோசடி செய்தார். பாதிக்கப்பட்ட வேல்முருகன் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.
எஸ்.பி., உத்தரவில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, வேணுகோபாலை கைது செய்தார்.