/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அக்னி நட்சத்திரம் துவங்கியதால் சிவன் கோயில் தாராபாத்திர பூஜை
/
அக்னி நட்சத்திரம் துவங்கியதால் சிவன் கோயில் தாராபாத்திர பூஜை
அக்னி நட்சத்திரம் துவங்கியதால் சிவன் கோயில் தாராபாத்திர பூஜை
அக்னி நட்சத்திரம் துவங்கியதால் சிவன் கோயில் தாராபாத்திர பூஜை
ADDED : மே 05, 2024 04:20 AM

பெரியகுளம் : அக்னி நட்சத்திரம் துவங்கியதை முன்னிட்டு சிவன் கோயில்களில் தாராபாத்திரம் பூஜை துவங்கியது.
பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நேற்று அக்னி நட்சத்திரம் துவக்கத்தை முன்னிட்டு, சிவனுக்கு தாராபாத்திரம் அபிஷேகம் நடந்தது. சுவாமியை குளிர்விக்கும் விதமாக சிவனுக்கு மேலே தாரா பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பப்படும். ஒவ்வொரு சொட்டாக சிவன் மீது தண்ணீர் விழும். நேற்றிலிருந்து (மே 4) முதல் மே 24 வரை 21 நாட்களுக்கு காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்களுக்கு தயிர்சாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் சிவனுக்கு மேல் தாரா பாத்திரத்தில் நீர் நிரப்பப்பட்டுள்ளது.