/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் நீர்மட்டம் குறைவதால் மீன்கள் வரத்து அதிகரிப்பு ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொது மக்கள்
/
வைகை அணையில் நீர்மட்டம் குறைவதால் மீன்கள் வரத்து அதிகரிப்பு ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொது மக்கள்
வைகை அணையில் நீர்மட்டம் குறைவதால் மீன்கள் வரத்து அதிகரிப்பு ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொது மக்கள்
வைகை அணையில் நீர்மட்டம் குறைவதால் மீன்கள் வரத்து அதிகரிப்பு ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொது மக்கள்
ADDED : ஏப் 28, 2024 05:19 AM

ஆண்டிபட்டி : வைகை அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பிடிபடும் எடையளவு அதிகரித்தும், பெரிய அளவில் உள்ள மீன்களை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
வைகை அணை நீர்தேக்கத்தில் மீன்பிடித் தொழில் தனியார் மூலம் 5 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் பதிவு பெற்ற மீனவர்கள் மீன்களைப் பிடித்து குத்தகைதாரரிடம் ஒப்படைத்து அதற்கான சம்பளம் பெறுகின்றனர். ஆண்டுதோறும் வைகை அணை நீர்த்தேக்கத்தில் ஜூலை, ஆகஸ்டில் கட்லா, மிருகாள், ரோகு வகை மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்படும். மீன் குஞ்சுகள் சில மாதங்களில் வளர்ந்த பின் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். வைகை அணை நீர்த்தேக்கத்தில் இயற்கையாக வளரும் ஜிலேபி, ஆறா, உழுவை வாழை மீன்கள் அதிகம் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் வைகை அணை நீர்மட்டம் முழு அளவில் இருந்தது. இதனால் நீரின் ஆழமான பகுதிக்கு சென்று விடும் மீன்கள் வலையில் சிக்கவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன் முழு அளவில் 71 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 57.41 அடியாக உள்ளது. நீர்மட்டம் குறைவதால் வலையில் பெரிய அளவிலான மீன்கள் பிடிபடுகிறது. குத்தகை மீன்பிடித் தொழில் நிர்வாகிகள் கூறியதாவது:
மேட்டூர், சாத்தனுார், வைகை அணை நீர்த்தேக்கங்களில் இயற்கையாக வளரும் வாழை மீன்கள் அதிகம் உள்ளன. சுவை அதிகம் என்பதால் இந்த மீன்கள் எப்போதும் கிராக்கியுடன் விற்பனையாகும். வைகை அணை நீர்த்தேக்கத்தில் கோழிக்கறி கழிவுகள், இறந்த நாய் ஆகியவற்றை மீன்களின் உணவுக்காக நீர் தேக்கத்தில் போடுவதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி மீன் வாங்கும் மக்களை குழப்புகின்றனர். அவ்வாறு இல்லை.
வைகை அணை நீர்த்தேக்கம், நீர் பாசன துறை மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது 8 முதல் 10 கிலோ எடை கொண்ட வாழை மீன்கள் பிடிபடுகிறது. தினமும் ஒரு டன் அளவிலான மீன்கள் வைகை அணையில் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

