/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணி தீவிரம் ஏப்.,10ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி

ADDED : ஏப் 07, 2024 05:43 AM

தேனி : ஓட்டுபதிவு இயந்திரத்தில் ஓட்டுச்சீட்டுகளை பொருத்தும் பணி மேற்கொள்ள தொகுதி வாரியாக ஓட்டுச் சீட்டு அனுப்பும் பணி தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகளில் 1788 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேர்தலில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.தேர்தலின் போது ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் அச்சிட்ட ஓட்டுச்சீட்டு பொருத்துப்படும்.
இந்த சீட்டுகள் சென்னையில் அச்சிடப்பட்டு தேனிக்கு கொண்டு வரப்பட்டன.
இவை சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஒவ்வொரு ஓட்டுச்சீட்டிலும் அனைத்து வேட்பாளர்கள், சின்னங்கள் உள்ளிட்வை அச்சிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து பிரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. ஏப்.,10க்குமேல் ஒட்டுபதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.