/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சட்டசபை தொகுதி வாரியாக சிறப்பு குழு அ.தி.மு.க. வில் திடீர் நியமனம் தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற வியூகம்
/
சட்டசபை தொகுதி வாரியாக சிறப்பு குழு அ.தி.மு.க. வில் திடீர் நியமனம் தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற வியூகம்
சட்டசபை தொகுதி வாரியாக சிறப்பு குழு அ.தி.மு.க. வில் திடீர் நியமனம் தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற வியூகம்
சட்டசபை தொகுதி வாரியாக சிறப்பு குழு அ.தி.மு.க. வில் திடீர் நியமனம் தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற வியூகம்
ADDED : ஏப் 16, 2024 04:48 AM
கம்பம்: சட்டசபை தொகுதி வாரியாக 14 பேர் கொண்ட சிறப்பு குழுவை அ.தி.மு.க., நியமித்துள்ளது. தேனி தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்த கட்சி தலைமை நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
தேனி தொகுதியில் அ.ம.மு.க. பா.ஜ. கூட்டணியில் தினகரன் போட்டியிடுகிறார். ஏற்கெனவே எம்.பி. யாக இருந்தவர், தொகுதி முழுவதும் சொந்த செலவில் பல விஷயங்களை செய்து கொடுத்தது தற்போது கை கொடுக்கிறது.
இந்நிலையில் ஆளும் தி.மு.க. கடந்த தேர்தலில் தேனியில் மட்டும் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது.
அ.தி.மு.க. தி. மு. க.. என்ற இரண்டு கட்சிகளுக்கும் பொது எதிரியாக அ.ம.மு.க. உள்ளது. தி.மு.க.,வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளில் பணியாற்றுகின்றனர்.
அ.தி.மு.க. வோ தினகரன் வெற்றி பெற்றால் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆகிவிடும். மேலும் இரட்டை இலையை வீழ்த்தி விட்டேன் என்பார். கட்சியை கைப்பற்ற காய்களை நகர்த்துவார். அவருக்கு பா.ஜ. வின் ஆதரவு வேறு உள்ளது.
எனவே, அ.தி.மு.க. வெற்றி பெற, கடுமையாக உழைக்க முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
கட்சி தலைமையின் உத்தரவை தொடர்ந்து தேனி லோக்சபா தொகுதியில் மட்டும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 பேர் கொண்ட சிறப்பு குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நகராட்சி தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கவனிப்பை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் யார் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, தேனி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். கடைசி வரை போராடுங்கள்.
இல்லையென்றால் இரண்டாவது இடத்திலாவது இருக்க வேண்டும். தினகரனை விட அதிக ஒட்டுக்களை பெற வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
கட்சி தலைமையின் உத்தரவை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று காலை கம்பத்தில் கட்சியினருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

