ADDED : ஜூன் 27, 2024 05:00 AM
மூணாறு, : மூணாறில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறியதுடன் பொருள் உதவிகள் செய்தனர்.
மூணாறில் மவுண்ட் கார்மல் சர்ச் ஆடிட்டோரியத்தில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் எம்.ஜி.. மற்றும் அந்தோணியார் ஆகிய காலனிகளில் வசித்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று பல்வேறு தரப்பினர் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் பொருள் உதவி செய்தனர்.
தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா முகாமில் உள்ளவர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார். அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ.மணி, காங்., வட்டார தலைவர் விஜயகுமார், மூணாறு ஊராட்சி தலைவர் தீபா, உறுப்பினர் மார்ஸ்பீட்டர் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மூணாறு வர்த்தக சங்க தலைவர் பாபுலால், பொது செயலாளர் கணேசன், துணைத் தலைவர் லிஜி ஐசக், வட்டார தலைவர் சாஜூவர்க்கீஸ் ஆகியோர் முகாமுக்குச் சென்று தேவையான உணவு பொருட்களை வழங்கினர். அதேபோல் காய்கறி மார்க்கெட் வர்த்தக சங்கத்தினரும் பொருளுதவி வழங்கினர்.