/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலை பகுதி அணைகளில் நீர்மட்டம்... குறைந்தது; மூன்று மாதங்களாக மழை பெய்யாததால்..

ADDED : ஏப் 22, 2024 05:56 AM
மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் என சிறிய அணைகள் பல உள்ளன. இந்த அணைகளில் சேகரமாகும் தண்ணீரை பயன்படுத்தி சுருளியாறு நீர் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் மின்சாரத்தின் தேவைக்கு ஏற்ப, இங்கு உற்பத்தி நடைபெறும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் உற்பத்தி செய்வர். இந்தாண்டு கடந்த ஜனவரியில் குறைந்த அளவு மழை கிடைத்தது. அதன் பின் கடந்த 3 மாதங்களாக சுத்தமாக மழை இல்லை. இதனால் இங்குள்ள அணைகளில் நீர் மட்டம் மனமளவென சரிந்தது.
தென் மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களில் அணைகளின் நீர் மட்டம் முழு கொள்ளளவிற்கு எட்டி, உபரி நீர் சுருளி அருவி வழியாக வெளியேறும். ஆனால் இந்தாண்டு குறைந்த அளவே மழை பெய்தது. அதுவும் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. மாறாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. எந்தாண்டிலும் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் நிலவுவதால், அணைகளின் நீர் மட்டம் மளமளவென குறைந்து விட்டது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் அணைகளின் நீர் மட்டம் நேர் எதிராக இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மே மாதத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இரவங்கலாறு அணையில் உள்ள தண்ணீரை வைத்து 2 நாட்களுக்கு ஒரு முறை 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் என மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.