/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் குறைந்தது மழை ஓடையில் விழுந்து ஒருவர் பலி
/
இடுக்கியில் குறைந்தது மழை ஓடையில் விழுந்து ஒருவர் பலி
இடுக்கியில் குறைந்தது மழை ஓடையில் விழுந்து ஒருவர் பலி
இடுக்கியில் குறைந்தது மழை ஓடையில் விழுந்து ஒருவர் பலி
ADDED : ஜூலை 18, 2024 05:09 AM

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் மழை சற்று குறைந்தபோதும் மண்சரிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தது. மாவட்டத்திற்கு நேற்று கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களைவிட நேற்று மழை சற்று குறைந்த போதும் மண் சரிவுகள் தொடர்ந்தது. அதனால் பெரும் பாதிப்புகள் இல்லை என்ற போதும் சிறிய சேதங்கள் ஏற்பட்டன.
குறைவு
மூணாறில் ஜூலை 13, 14ல் 18 செ.மீ., மழை பெய்த நிலையில் ஜூலை 15ல் 24 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மழை 12 செ.மீ., குறைவாக பெய்தது. கடந்த நான்கு நாட்களாக மழை அதிகரித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
நிவாரண முகாம்
மாவட்டத்தில் மூணாறில் மட்டும் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. நகரில் மவுண்ட் கார்மல் பேராலயம் கட்டடத்தில் உள்ள முகாமில் லட்சம் காலனியைச் சேர்ந்த ஆண்கள் 8, பெண்கள் 21, சிறுவர்கள் 4 என 33 பேர் ஜூன் 25 முதல் தங்கி வருகின்றனர்.
அகற்றம்
மூணாறு அருகே தேவிகுளத்தில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. அதன் நுழைவு வாயிலில் இரண்டு தினங்களுக்கு முன் மண் சரிவு ஏற்பட்டது. அதனை நேற்று அகற்றினர்.
வாலிபர் பலி
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் புதுக்குடியைச் சேர்ந்த சுனீஷ் 21, கால் தவறி ஓடையில் விழுந்து இறந்தார். அவர், அருகில் உள்ள தாழும் கண்டம்குடியில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வழியில் உள்ள ஓடையை கடக்க முயன்றபோது கால் தவறி விழுந்தார். ஓடையில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்துள்ளது.