ADDED : ஜூலை 24, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஜூலை 25-
பெரியகுளம் சந்தை தெரு ரவிச்சந்திரன் மனைவி ரத்தினதேவி 45. மேல்மங்கலத்தில் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். ரவிச்சந்திரன் இறந்துவிட்டார். அவரின் முதல் மனைவி அமுதாவின் மகன்களான கிஷோர் கண்ணன் 32. ரூபேஷ்கண்ணன் 30. திருப்பதி கண்ணன் 29. ஆகிய மூவரும், ரத்தினதேவியை அவதூறாக பேசி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ரத்தினதேவி அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில், தென்கரை போலீசார் கிஷோர் கண்ணன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
--
