/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி மனு
/
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி மனு
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி மனு
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி மனு
ADDED : பிப் 25, 2025 06:44 AM
கம்பம்: காமயகவுண்டன்பட்டி 4வது வார்டு கவுன்சிலர் வெற்றிச்செல்வியின் கணவர் முத்துவீரப்பன். இவர் தி.மு.க.,மாவட்ட பிரதிநிதியாகவும், நுகர்வோர் அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.
டிச. 26ல் காமயகவுண்டன்பட்டி முல்லைப்பெரியாற்றில் குளித்து விட்டு திரும்பும் போது, நான்கு பேர் கொண்ட கும்பல் இவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே தன்னை தாக்கியவர்கள் யார் என்ற விபரத்தை போலீசாரிடம் முத்துவீரப்பன் கூறியுள்ளார். ஆனால் ராயப்பன்பட்டி போலீசார் முத்துவீரப்பன் அடையாளம் காட்டியவர்களை அழைத்து விசாரிக்க வில்லை.
'தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராயப்பன்பட்டி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி தேனி எஸ்.பி. சிவபிரசாத்திடம் மனு அளித்துள்ளார்.