ADDED : செப் 06, 2024 05:45 AM

தேனி: கணவனை இழந்த பெண் தன்னை சந்திக்க மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட தேவாரம் டி.கே.வி., பள்ளித் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துக்குமாருக்கு 39, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேவாரம் டி.கே.வி., பள்ளித் தெரு ஜோதிலட்சுமி 39. அதேப் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தண்டனை பெற்ற முத்துக்குமாருடன் 39, கடந்த 2020ல் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் 6 மாதம் பழகி வந்த நிலையில் திடீரென சந்திக்க வரக்கூடாது, பேசக்கூடாது என ஜோதிலட்சுமி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் 2020 மார்ச் 6, அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார். காயமடைந்த ஜோதிலட்சுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முத்துக்குமாரை தேவாரம் போலீசார் கைது செய்தனர். நேற்று விசாரணை முடிந்த நிலையில், தொழிலாளி முத்துக்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.