ADDED : ஆக 09, 2024 12:42 AM
தேனி: டொம்புச்சேரி சவுடாம்பிகை தெரு வலசம்மாள் 54. இவர் தேனியில் உள்ள நிறுவனத்தில் குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஆக.7ல் உடன் பணிபுரியும் கோடாங்கிபட்டி செல்வம் டூவீலரில் டொம்புச்சேரி நோக்கி சென்றனர். உப்புக்கோட்டையை அடுத்த பிள்ளையார் கோயில் அருகேசென்ற போது பின்புறம் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த மர்மநபர், திடீரென வலசம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச்செயினை பறிக்க முயன்றார். சுதாரித்து செயினை இறுக பிடித்துக் கொண்டார். இதில் செயின் அறுந்து கீழே விழுந்தது. பாதிக்கப்பட்ட வலசம்மாள் புகாரில், வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி முயற்சி செய்த நபரை தேடி வருகின்றனர்.
தேனியில் கார் எரிப்பு
போலீஸ் விசாரணை
தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள கூரியர் ஆபீஸ் தெரு தைலா ஜேம்ஸ். இவர் போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு வீட்டிற்கு வெளியே டயர் வெடிக்கு சப்தம் கேட்டு வெளியே வந்தனர். அப்போது தங்களது கார் எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்து தீ அணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தைலாஜேம்ஸ் தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகிறார்.
பெண் தற்கொலை
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பகவதிராஜ் 30. இவரது மனைவி புஷ்பவதி 26. இவர்களுக்கு 2020ல் திருமணம் நடந்தது. மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் புஷ்பவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--ஆடுகள் திருட்டு
தேனி: மாணிக்காபுரம் வடக்குத்தெரு ராஜா 47. உப்புக்கோட்டை - டொம்புச்சேரி ரோட்டில் உள்ள விநாயகர் கோயில் அருகே ஆடுகள் வளர்த்து வந்தார். இவர் ஆக., 7 ல் தனது வீட்டின் முன் உள்ள கொட்டகையில் 5 ஆடுகளை அடைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்று துாங்கினார். நள்ளிரவில் ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக பார்த்தபோது 5 ஆடுகளும் காணவில்லை. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம். வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., அசோக் விசாரிக்கிறார்.
லாட்டரி விற்றவர் கைது
போடி: போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் கருப்பையா 55. இவர் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் கருப்பையாவை கைது செய்து அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள், விற்பனை செய்து வைத்திருந்த ரூ.2200 யை பறிமுதல் செய்தனர்.