/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூத் கமிட்டிகளுக்கு கவனிப்பு அ.தி.மு.க. அ.ம.மு.க., தாராளம்
/
பூத் கமிட்டிகளுக்கு கவனிப்பு அ.தி.மு.க. அ.ம.மு.க., தாராளம்
பூத் கமிட்டிகளுக்கு கவனிப்பு அ.தி.மு.க. அ.ம.மு.க., தாராளம்
பூத் கமிட்டிகளுக்கு கவனிப்பு அ.தி.மு.க. அ.ம.மு.க., தாராளம்
ADDED : ஏப் 19, 2024 05:49 AM
கம்பம்: பூத் கமிட்டிகளுக்கு மேற்கொண்ட பட்டுவாடாவில் அ.தி.மு.க. வும், அ.ம.மு.க.வும் தாராளம் காட்டியுள்ளது. தி.மு.க. கையை சுருக்கி கொண்டது.
தேனி லோக்சபா தொகுதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒரு மாதம் மேற்கொண்ட பிரசாரத்திற்கு இன்று அறுவடை செய்யும் நாளாகும். ஓட்டுச் சாவடி பணிக்கென ஒவ்வொரு கட்சியிலும் இருவர் முகவர்களாக நியமனம் செய்யப்படுள்ளனர்.
அது தவிர ஒட்டுச் சாவடிகளுக்கு வெளியில் இருந்து கேன்வாஸ் செய்ய 10 முதல் 20 நபர்கள் ஒவ்வொரு கட்சியிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டிகளுக்கு செலவிற்கென நேற்று முன்தினம் மாலை முதல் பட்டுவாடா நடந்தது. அ.தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம், அ.ம.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரம், தி.மு.க. சார்பில் ரூ.15 ஆயிரம் தரப்பட்டது. ஓட்டுச்சாவடிக்குள் செல்லும் முகவர்கள், வெளியில் கேன்வாஸ் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உணவு, குடிநீர், காபி, டீ, பேட்டா அனைத்தும் அதில் அடக்கம்.
இந்த தொகை சம்பந்தப்பட்ட பூக்கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கவனிப்பில் அ.தி.மு.க., தாராளம் காட்டியுள்ளது.

