/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலை இல்லாத விலையால் ஏல விவசாயிகள் புலம்பல்
/
நிலை இல்லாத விலையால் ஏல விவசாயிகள் புலம்பல்
ADDED : ஜூலை 02, 2024 06:32 AM
கம்பம் : ஏலக்காய் விலை 20 நாட்களில் கிலோவிற்கு ரூ.400 வரை குறைந்தது. நிலையில்லாமல் உள்ள விலையால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது.
இந்தியாவில் ஒரே மாவட்டத்தில் அதிக பரப்பில் இங்கு மட்டுமே ஏலக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
கேரளாவில் சாகுபடி நடந்தாலும், 50 சதவீத விவசாயிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அது மட்டுமல்லாமல் அங்கு - தோட்ட தொழிலாளர்களாக இருப்பவர்களும் தமிழர்கள்.
ஏலக்காய் விவசாயத்தை பொறுத்தவரை விளைச்சல் பாதிப்பு, விலை கிடைக்காதது போன்ற பிரச்னைகள் தொடர்கதையாகி வருகிறது.
சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வரும் ஆகஸ்ட் மாதம் எடுக்க வேண்டிய மகசூல், டிசம்பருக்கு தள்ளிப் போகும் நிலை உள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சராசரி விலை கிலோவிற்கு ரூ.2700 வரை கிடைத்தது.
என்ன நடந்தது என தெரியவில்லை. 20 நாட்களில் கிலோவிற்கு ரூ.-400 குறைந்து ரூ. 2192 ஆனது. 20 நாட்களில் சராசரி விலை ரூ.400 வரை குறைந்துள்ளது. தற்போது தோட்டங்களில் இருந்து காய் வரத்து இல்லை. ஏலக்காய் வர்த்தகத்தில் என்ன தான் நடக்கிறது என்பது தெரியவில்லை.
குழப்பமாக உள்ளது. ஸ்பைசஸ் வாரியம் நிபுணர்கள் குழு அமைத்து ஏலக்காய் வர்த்தகத்தில் நடைபெறும் விசயங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னோடி ஏல விவசாயி புதுப்பட்டி அருண்பிரசாத் கோரியுள்ளார்.