ADDED : ஆக 22, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சி மேலத்தெரு நந்தினி 33. இவரது கணவர் ஆட்டோ டிரைவர் குணா 36.
இவர் ஆக., 20ல் மாலை புது பஸ் ஸ்டாண்டில் பயணியை ஆட்டோவில் ஏற்றி இறக்கிவிட்டு, மீண்டும் அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் வந்தார்.
அப்போது எதிரே தேனி ஜான்பென்னிகுவிக் நகர் சடையால் கோயில் தெரு குமரேசன் 32, ஓட்டிவந்த கார், ஆட்டோவில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.