/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறு அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து: 3 பேர் கைது
/
மூணாறு அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து: 3 பேர் கைது
மூணாறு அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து: 3 பேர் கைது
மூணாறு அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து: 3 பேர் கைது
ADDED : மே 29, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.
கம்பெனிக்குச் சொந்தமான சிவன்மலை எஸ்டேட் பழைய மூணாறு டிவிஷனைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கணேஷ்மூர்த்தி 42. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் தாஸ். கணேஷ்மூர்த்தியின் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் கணேஷ்மூர்த்தியின் நெஞ்சில் கத்தி குத்து விழுந்தது. அச்சம்பவத்தில் தாஸ் 38, அவரது மனைவி மகாலட்சுமி 34, உறவினர் மணி 40, ஆகியோரை மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்தனர்.