/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் பரவிவரும் பறவை காய்ச்சல் எதிரொலி பறவைகள் வளர்ப்போரை கண்காணிக்க உத்தரவு

ADDED : மே 02, 2024 05:46 AM
கம்பம்: கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலை தொடர்ந்து, தமிழகத்தில் பறவைகள் வளர்ப்போர், இறைச்சி கடைகளில் பணியாற்றுபவர்களை கண்காணிக்க பொதுச் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது
- கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ஆழப்புழா அருகில் உள்ள குட்டநாடு பகுதியில் கடந்த மாதம் வாத்துகளிடம் பறவை காய்ச்சல் காணப்பட்டது.
இதனால் வாத்துகள் கொல்லப்பட்டன. பிராய்லர் கோழிகளும் மொத்தமாக கொல்லப்பட்டன.
தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க எல்லையோர நகரங்களில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம், மாவட்ட துணை இயக்குனர்கள் மூலம் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''பிராய்லர் கோழிகள் மொத்தமாக வளர்க்கும் இடங்கள், வாத்துகள் இருக்கும் கூடங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பறவைகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், சிகிச்சையளிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து ககாதாரத் துறையினர் பறவை வளர்ப்போர்களை கண்காணித்து வருகின்றனர்.