ADDED : ஜூலை 01, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் குலாலர் சமூக சேவை கல்வி அறக்கட்டளை, குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகி சீனிவாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 82 மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். விழாவில் மாவட்ட துணைத் தலைவர்கள் மாறன், கணேசன், மாவட்டச் செயலாளர் சதீஸ், பொருளாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள குலாலர் சமுதாயத்திற்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.