ADDED : மார் 02, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் விவசாய கடன் திட்டம் பற்றி பிரதமரின் காணொளி காட்சி திரையிடப்பட்டது. விவசாயிகளுக்கு வேளாண் கடன் மானிய திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டது. வங்கி மேலாளர் விஜயசேகர் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னோடி விவசாயிகள், வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.