ADDED : ஆக 30, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பால விநாயகர் கோயிலில் 48 நாள் மண்டல பூஜை நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12 ல் நடந்தது.
கும்பாபிஷேகம் முடிந்த நாள் முதல் நேற்று வரை தினமும் பல்வேறு பூஜைகள் நடந்தன. 48ம் நாள் மண்டல பூஜை தொடர்ந்து நேற்று முன் தினம் பாண்டி முனீஸ்வரர் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பூஜை செய்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசத்திற்கும் அபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

