/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டோரம் உணவு பதார்த்தங்கள் விற்க தடை
/
ரோட்டோரம் உணவு பதார்த்தங்கள் விற்க தடை
ADDED : மே 11, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: தேவிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோரம் உணவு பதார்த்தங்கள் விற்க தடைவிதித்து செயலர் அஜயகுமார் உத்தரவிட்டார்.
தேவிகுளம் ஊராட்சியில் மாட்டுபட்டி உள்பட பல்வேறு முக்கிய சுற்றுலா பகுதிகளில் உள்ளன. ஊராட்சி, சுகாதாரதுறை ஆகியோரிடம் அனுமதி பெறாமல் ரோட்டோரங்களில் உணவு பதார்த்தங்கள் விற்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் பல்வேறு விதங்களில் பாதிப்படைகின்றனர். தேவிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோரம் உணவு பதார்த்தங்கள் விற்க தடை விதித்து செயலர் அஜயகுமார்உத்தரவிட்டார்.