/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
/
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
ADDED : ஆக 13, 2024 12:36 AM

பெரியகுளம் : கொடைக்கானல், கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதி யில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளை குளிக்க வனத்துறை தடை விதித்தது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையால் ஆக., 8ல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை நிர்வாகம் குளிக்க தடை விதித்தது.
மறுநாள் ஆக.,9 வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மீண்டும் கும்பக்கரை அருவிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று முதல் (ஆக.12) குளிக்க தடை விதித்தது.
கடந்த 4 நாட்களில் 2 வது முறையாக தடை விதித்தது குறிப்பிட்டதக்கது.--