/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பைபாஸ் ரோட்டில் வேகத்தை கட்டுப்படுத்த 'பேரிகார்டு' அமைப்பு
/
பைபாஸ் ரோட்டில் வேகத்தை கட்டுப்படுத்த 'பேரிகார்டு' அமைப்பு
பைபாஸ் ரோட்டில் வேகத்தை கட்டுப்படுத்த 'பேரிகார்டு' அமைப்பு
பைபாஸ் ரோட்டில் வேகத்தை கட்டுப்படுத்த 'பேரிகார்டு' அமைப்பு
ADDED : ஏப் 29, 2024 05:57 AM

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி பைபாஸ் ரோட்டில் விபத்து பகுதியில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்- தேனி பைபாஸ் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. வடுகபட்டி அருகே நான்கு வழி பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது இரவில் 15 க்கும் அதிகமான விபத்துக்கள் நடந்துள்ளது.
இதில் 10 பேர் வரை இறந்துள்ளனர். இதில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலியான வழக்கில் தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த விபத்து பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு பேரிகார்டு அமைக்க பல்வேறு தரப்பினர் நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த நான்கு பேரிகார்டுகள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் வழியாக தேனிக்கு செல்லும் வாகனங்களும், தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் வாகனங்களும், இதே போல் பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி வழியாக ஆண்டிபட்டி செல்லும் வாகனங்கள், ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளம் செல்லும் வாகனங்களும் சம்பந்தப்பட்ட இடத்தில் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இடத்தில் வரவேற்பு பெற்றுள்ளது.

