/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசியல் கட்சி பிளக்ஸ் போர்டினால் வராகநதியில் தடுப்பு வலைகள் சேதம்
/
அரசியல் கட்சி பிளக்ஸ் போர்டினால் வராகநதியில் தடுப்பு வலைகள் சேதம்
அரசியல் கட்சி பிளக்ஸ் போர்டினால் வராகநதியில் தடுப்பு வலைகள் சேதம்
அரசியல் கட்சி பிளக்ஸ் போர்டினால் வராகநதியில் தடுப்பு வலைகள் சேதம்
ADDED : ஆக 30, 2024 05:54 AM

பெரியகுளம் : பெரியகுளம் வராகநதியில் குப்பை கொட்டுவதை தடுக்க அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வலை அரசியல் கட்சி பிளக்ஸ் போர்டுகளால் சேதமடைந்துள்ளது.
பெரியகுளம் தண்டுப்பாளையம், ஆடுபாலம் பகுதிகளில் செல்லும் வராகநதியில் குப்பை கொட்டி மாசுபடுவதை தடுக்க,
முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரு பாலம் பகுதிகளில் தடுப்பு கம்பி வலை 12 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது. இதனால் பாலத்திலிருந்து குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவது, காலி மதுபாட்டில்களை தூக்கி வீசுவது தடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்ட தடுப்பு கம்பி வலைகளில் அரசியல் கட்சியினர் போட்டி, போட்டுக்கொண்டு சமீபமாக பிளக்ஸ் பேனர்களை அமைக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு கம்பி வலையில் பிளக்ஸ் போர்டு கட்டியி ருந்த நிலையில்
காற்றுடன் மழை பெய்ததில் பிளக்ஸ் பேனர்கள் பாரம் தாங்காமல் 50 மீட்டர் தூரத்திற்கு இரும்பு வலை உடைந்து சேதமானது.
சேதமடைந்து தொங்கி கொண்டிருக்கும் வலையை அகற்றிவிட்டு அப்பகுதியில் வராக நதியை பாதுகாக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் கம்பி வேலை அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

