/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மலைப்பகுதியில் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
/
மலைப்பகுதியில் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
மலைப்பகுதியில் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
மலைப்பகுதியில் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
ADDED : ஆக 08, 2024 05:37 AM

பெரியகுளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை நிர்வாகம் தடை விதித்தது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ.,தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையும், கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதியில்
சாரல் மழையும் அவ்வப்போது பெய்கிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று முதல் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறை நிர்வாகம் தடை விதித்தது.
தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் குளிக்க அனுமதிக்கப்படுவர் எனவனத்துறையினர் தெரிவித்தனர்.