/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெயிலில் நிற்கும் பேட்டரி ஆட்டோக்கள்
/
வெயிலில் நிற்கும் பேட்டரி ஆட்டோக்கள்
ADDED : பிப் 25, 2025 06:36 AM

பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் 11 பேட்டரி வாகனங்கள் பல நாட்களாக வெயில் மழையில் சிக்கியுள்ளது.
பெரியகுளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கீழ வடகரை ஊராட்சி 10, எண்டப்புளி ஊராட்சி 1 என குப்பை சேகரிப்பிற்காக 11 பேட்டரி ஆட்டோக்களை மத்திய அரசு முழு சுகாதார தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் வழங்கியுள்ளது.
இதில் ஒரு ஆட்டோ ரூ.2.48 லட்சம் மதிப்பிலானது.
இந்த ஆட்டோக்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் ஒன்றிய அலுவலகத்தில் திறந்தவெளி பகுதியில் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பேட்டரி சேதமடையும் வாய்ப்பு உள்ளது.
பெரியகுளம் ஒன்றிய நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு ஆட்டோ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை ஆட்டோக்களை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்.