/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருதரப்பு தகராறு: 10 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு தகராறு: 10 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 16, 2024 05:24 AM
தேனி: தேனி அருகே தாடிச்சேரியில் ஆட்டோ, டூவீலர்கள் வேகமாக ஓட்டுவது தொடர்பாக இருதரப்பு இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ஜூன் 13 இரவு இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு தரப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஈஸ்வரன் புகாரில் மேற்குத்தெரு மருதுபாண்டி, சூர்யா, தீபக், பாண்டி, காஞ்சாயி பேரன்கள், பாலமுருகன் என்பவரது மகன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். மற்றொரு தரப்பை சேர்ந்த மருந்து கடை ஊழியர் அஜித் புகாரில், அதே ஊரைச் சேர்ந்த முத்து, ஆசை மகன் ஈஸ்வரன், தங்கப்பாண்டி, கந்தசாமி மகன் ஈஸ்வரன் ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தகராறு தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.